Published : 27 Dec 2022 06:40 AM
Last Updated : 27 Dec 2022 06:40 AM

சைபர் தொழில்நுட்ப போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை: சிசிடிவி கேமராவில் தொழில்நுட்பத்தை புகுத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பரிசு வழங்கினார்.

பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகிறது. அத்தகைய சிசிடிவி கேமராக்களின் தரத்தை உயர்த்தி அதை பயன்படுத்த சென்னை போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி, புதியதொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மாணவ, மாணவிகளுக்கு 8 தலைப்புகளில் ‘சைபர் ஹேக்கத்தான்’ போட்டி நடத்தினர்.

இதில் முதல் இடத்தை விஐடி பொறியியல் கல்லூரியும், 2-ம் இடத்தை கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியும், 3-ம்இடத்தை சென்னை சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியும் பிடித்தன. வெற்றி பெற்ற குழுக்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் பரிசுகளை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x