Published : 26 Dec 2022 04:17 AM
Last Updated : 26 Dec 2022 04:17 AM

‘விரு’ செயலி: 5,000-க்கு மேற்பட்டோர் பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆட்சியர் மேக நாதரெட்டி | கோப்புப் படம்

விருதுநகர்: விருதுநகர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ‘நல்லாட்சி வாரம்” தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்களுடனான பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் ஆட்சியர் பேசியதாவது: பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது அரசு அலுவலர்களின் தலையாயக் கடமை. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் தெரிவிக்கும் குறைகளை மக்களே நேரில் வந்து மனு அளிப்பதுபோல் பாவித்து நாம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் சேவைகளை மக்கள் அறிந்துகொள்ள "விரு” விருதுநகர் மக்கள் குறை தீர் மற்றும் தகவல் சேவை 94884 00438 என்ற எண் மூலம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அதன் மூலம் அனைத்துத் துறைகளின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ள லாம். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பயிலரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலகவதி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x