Published : 26 Dec 2022 04:20 AM
Last Updated : 26 Dec 2022 04:20 AM
நாகப்பட்டினம்/ காரைக்கால்: நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே, திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை, பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. அவ்வவ்போது மிதமான மழை பெய்தது. இதேபோல காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலும் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT