Published : 15 Nov 2022 04:55 AM
Last Updated : 15 Nov 2022 04:55 AM

பாலாற்றில் 1,460 கனஅடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் வேலூர் விரிஞ்சிபுரம் பகுதி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால், ஆறு களை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்து வரு கிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை பரவலான கன மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்ச அளவாக பொன்னை அணைக்கட்டு பகுதியில் 12.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மோர்தானா பகுதியில் 6, குடியாத்தம் 5, மேல் ஆலத்தூர் 5.8 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

தமிழக -ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரம் கொண்டது. அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கான நீர்வரத்து முழுவதும் உபரி நீராக ஆற்றில் கலந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.64 அடி உயரம் கொண்டது. அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர் மழையால் அணைக்கு வரும் 43.79 கன அடி நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.

ஏரிகள் நிலவரம்: வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 முழுமையாக நிரம்பியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரி களில் 137 ஏரிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரி களில் 180 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1,460 கன அடி நீர்வரத்து: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 415 கன அடிக்கும், மண்ணாற்றில் இருந்து 100, கல்லாற்றில் இருந்து 50, மலட்டாற்றில் இருந்து 250, அகரம் ஆற்றில் இருந்து 340, மோர் தானாவில் இருந்து 250, பேயாற் றில் இருந்து 40, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 என பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

ஆட்சியர் எச்சரிக்கை: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித் துள்ளதால் பொதுமக்கள் எச் சரிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாறு, கொட்டாறு, பொன்னையாறு, பேயாற் றில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் மேற்படி ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்க வோ மற்றும் குழந்தைகள் ஆற்றுப் படுகைகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x