Published : 02 Nov 2022 04:00 AM
Last Updated : 02 Nov 2022 04:00 AM
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்தலிங்க மடம் கிராமத்தில் நேற்று நடைபெற இருந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக் கணித்து கடையடைப்பு நடத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அமைச்சர் பொன்முடி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். கொட்டும் மழையில் அமைச்சரை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும், கிராம மக்கள் தொடர்ந்து வாக்குவாதத் தில் ஈடுபட்டனர்.
ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி, ஒரு கட்டத்தில் அநாகரிகமான வார்த்தையால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து கிராம மக்களிடம் இருந்து அமைச்சரை போலீஸார் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT