Published : 02 Nov 2022 05:31 AM
Last Updated : 02 Nov 2022 05:31 AM

சென்னையில் நாளை தொடங்குகிறது தென்னிந்திய குறுநாடக திருவிழா - 50 பத்து நிமிட நாடகங்கள் அரங்கேற்றம்

மீரா கிருஷ்ணன்

சென்னை: சென்னையில் குறுநாடக திருவிழா நாளை தொடங்குகிறது.

10 நிமிட நாடகங்களின் திருவிழாஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ல்முதன்முதலாக தொடங்கியது. இந்த குறுநாடகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. தொடர்ந்து, பல நாடுகளுக்கும் இந்த குறுநாடக திருவிழா பரவியது. தற்போது ஆண்டுதோறும் 7 நாடுகளில் 30 நகரங்களில் குறுநாடக விழா அரங்கேற்றப்படுகிறது. இதில் சென்னையும் ஒன்று.

சென்னையில் இந்த விழாவை பிரக்ருதி அறக்கட்டளை, புளு லோட்டஸ் அறக்கட்டளை, அலியான்ஸ் பிரான்செஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட்ஸ் தென்னிந்திய நாடக விழா’ எனும் தலைப்பில் இது நடைபெற உள்ளது. நாடக நடிகர்கள், நாடகத்தைஎழுதுபவர்கள், இயக்குபவர்களுக்கு நல்வாய்ப்பை உண்டாக்கிதரும் நோக்கத்தோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் நாளை (நவ.3) தொடங்கி, 27-ம் தேதி வரை ஏறக்குறைய 50 நாடகங்கள் வரை அரங்கேறஉள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலத்தில் முதன்முதலாக நாடகங்கள் இத்திருவிழாவில் அரங்கேற இருப்பது கூடுதல் சிறப்பு.

மேலும் விவரங்களுக்கு shortandsweetsouthindia@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுகலாம் என்று பிரக்ருதி அறக்கட்டளையின் நிறுவனரும், நிகழ்ச்சி இயக்குநருமான மீரா கிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x