Published : 19 Oct 2022 07:13 AM
Last Updated : 19 Oct 2022 07:13 AM

அரசு பேருந்தின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் அத்துமீறல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடியும், ரயிலின்படிக்கட்டில் தொங்கியதோடு அரிவாள் மற்றும் பட்டாக் கத்திகளை நடை மேடையில் உரசியபடி செல்வதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாரிமுனையிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற மாநகர அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடியும் நடனம் ஆடிஅத்துமீறும் வீடியோ வெளியாகிஉள்ளது. மேலும், பேருந்தின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதை பின்னால் வந்த பஸ்ஸில்இருந்த பயணி ஒருவர் செல்போனில்வீடியோ எடுத்துள்ளார். கோயம்பேடுமேம்பாலத்தில் செல்லும்போது இந்தவீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆபத்தைஉணராமல் பேருந்தில் சாகசம் செய்தமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x