Published : 11 Jul 2022 03:52 PM
Last Updated : 11 Jul 2022 03:52 PM

‘ஒற்றைத் தலைமை தேவை’ - அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்

சென்னை: ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

  1. அமைப்புத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
  2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல்.
  3. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு.
  4. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது.
  5. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
  6. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியீடு
  7. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை
  8. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு
  9. அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்.
  10. சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
  11. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம்
  12. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
  13. இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்
  14. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
  15. நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
  16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x