Published : 16 Feb 2022 12:31 PM
Last Updated : 16 Feb 2022 12:31 PM

கோயம்பேடு சந்தை பிப்.19 விடுமுறை

தமிழகம்: முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலையொட்டி நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையும் 19-ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 19-ம் தேதி காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x