Published : 24 Apr 2016 10:47 AM
Last Updated : 24 Apr 2016 10:47 AM

பகுஜன் சமாஜ் கட்சி 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.கல்யாண சுந்தரம் நேற்று கூறியதாவது: திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அவர்கள் செய்த தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள், தற்போது தாங்கள்தான் மாற்று அணி என கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். ஏற்கெனவே, முதல்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, 2-வதுகட்டமாக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுகிறோம். பூவிருந்தமல்லி (தனி) வீரா.விஜயபாலாஜி, கொளத்தூர் சி.வேலன், சைதாப்பேட்டை எஸ்.முருகேசன் உட்பட 86 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, வரும் மே 8-ம் தேதி சென்னையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x