Last Updated : 20 May, 2024 04:23 PM

 

Published : 20 May 2024 04:23 PM
Last Updated : 20 May 2024 04:23 PM

தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதளம் அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின்கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால், நுகர்வோருக்கு காலதாமதமும் அலைச்சலும் ஏற்பட்டது. அத்துடன், காகித பயன்பாடும் அதிகரித்தது.

இதையடுத்து, மின்வாரியம் தனது சேவைகளை பொதுமக்கள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சேவை விரைவாக வழங்க முடிவதோடு, காகிதப் பயன்பாடும் தவிர்க்கப்பட்டது. இதற்காக, www.tangedco.org என்ற வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது. சேவையை பெற விரும்பும் நுகர்வோர், இந்த முகவரியில் சென்று பின்னர் சேவைகள் பிரிவுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மின்வாரியம் அனைத்து வகையான விண்ணப்பத் தேவைக்கும் ஒரே வலைதள முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, https://app1.tangedco.org/nsconline/ என்ற வலைதள முகவரியில் சென்றால் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளைப் பெறுவதற்கான தகவல்கள், விண்ணப்ப படிவங்கள், தேவைப்படும் ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள், விநியோக பிரிவுகள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x