Published : 02 Aug 2015 02:02 PM
Last Updated : 02 Aug 2015 02:02 PM

தடையை மீறி போராட்டம்: சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மறைந்த சசிபெருமாள் குடும்பத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆகியோர் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அறிவித்த படி சசிபெருமாள் மகன் விவேக், மகள் கவியரசி மற்றும் அரசியல் கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.

இதனையடுத்து இவர்களைக் கைது செய்யப்போவதாக காவல்துறை அறிவித்தது. இதனை போராட்டக்குழுவினர் எதிர்த்தனர் இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

உடனே வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x