Last Updated : 05 Jan, 2019 08:46 AM

 

Published : 05 Jan 2019 08:46 AM
Last Updated : 05 Jan 2019 08:46 AM

பாஜக அல்லாத மாநில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி: பாமக, தேமுதிக, தமாகாவை இணைக்க பேச்சுவார்த்தை?

திருவாரூர் இடைத்தேர்தல், அடுத்து வரப்போகும் நாடாளு மன்றத் தேர்தல் என தமிழக அரசியல் களம் தேர்தலை நோக்கி பயணித்து வருவதால், அரசி யல் கட்சிகளின் அணி சேர் தல், அணி மாற்றம் போன்ற காட்சிகள் அரங்கேறத் தொடங்கி யுள்ளன.

திமுக கூட்டணி ஓரளவு வடிவம் பெற்று வரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் உள்ள கட்சிகள் என்ன செய்யப் போகின் றன என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரு கிறது.

‘மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாமக மக்களவை யிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்துதான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை வகுத்து வருகிறது.

இதற்காக ஒத்த கருத் துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்’ என பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதே நேரம் அதிமுக வுக்கு சாதகமாகவும், பாஜகவை சாடியும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும் கல்வி, மருத்துவம் தவிர்த்து எப்போதும் இலவசங் களை எதிர்க்கும் பாமக பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர் களுக்கு ஆயிரம் ரூபாய் வழங் கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பை விமர்சனம் செய் யாமல் இருப்பது கூட்டணிக் கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது.

இதுபற்றி பாமக தலைமை யில் நெருக்கமாக உள்ள நிர்வாகி களை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘மக்களின் எண்ணங்களை அறிந்து, அதற்கேற்ப கூட்டணி அமைப்பதே பாமகவின் தாரக மந்திரம். கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் களம் கண்டு கொடுத்த அறிக்கையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிர்ப்பு இல்லை. திமுகவுக்கு சாதகமாகவும் சூழ்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளனர். பாஜக மீது மக்கள் ஜிஎஸ்டி விவகாரத் தில் கடும் கோபத்தில் உள் ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது.

முதல்வர் வேட்பாளர் அன்புமணி

மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், அதை சட்டசபை தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி பேரம் பேசவும் வாய்ப்பு வரலாம். திமுகவின் கூட்டணி பற்றி பேசினால் இந்த கோரிக்கை எடுபடாது.

பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை

தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியும் நடை பெற்று வருகிறது. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத் தால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதற்கு காலதாமதமாகிறது. பாஜக கூட்டணியில் இருந்தால் சிறுபான்மை வாக்குகளை இழக்க நேரிடும், மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியும் இல்லை.

பாஜக அல்லாத சில தமிழக கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலையும், அடுத்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்வது குறித்து அதிமுகவின் மூத்த அமைச்சர்களுடன் பேசப்பட்டு வருகிறது’ என்று தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x