Published : 19 Feb 2024 04:02 AM
Last Updated : 19 Feb 2024 04:02 AM
மதுரை: பிரிந்து கிடக்கும் சக்திகள் இணைந்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலில் சசிகலா, டிடிவி. தினகரன், நாங்கள் என மூவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எங்களைப் பொருத்தவரை பாஜகவையும், அதன் மத்திய அரசையும் முழுமையாக ஆதரிக்கிறோம். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பாஜக தந்துள்ளதால் ஆதரவைத் தவிர மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அவரிடம் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து உங்கள் அணி சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT