Published : 19 Feb 2024 05:46 AM
Last Updated : 19 Feb 2024 05:46 AM

இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசு பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி? - தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்

சென்னை: இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசுபொறுப்பேற்றதில் இருந்து கடந்தமாதம் வரை 60,567 பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில்நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பணிக்கானபணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வுவாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளுக்கு 27,858 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 2024 ஜனவரி வரை 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துறைவாரியான நியமனங்களில் நீதித்துறையில் 5,981, பள்ளிக்கல்வித் துறையில் 1,847, வருவாய்த் துறையில் 2,996, சுகாதாரத் துறையில் 4,286, ஊரக வளர்ச்சித் துறையில் 857, உயர் கல்வித்துறையில் 1,300 மற்றும் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்கள் என அந்தந்ததுறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாகநிரப்பப்பட்டன.

இவ்வாறாக, திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 60,567 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 15,442 பணியிடங்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x