Published : 19 Feb 2024 05:19 AM
Last Updated : 19 Feb 2024 05:19 AM

தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் இன்று வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x