Published : 10 Nov 2023 05:28 AM
Last Updated : 10 Nov 2023 05:28 AM

வருமான வரி, அமலாக்கத் துறைகளை குற்றம்சாட்டும் நிலையில் போலீஸ் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: வருமான வரி, அமலாக்கத் துறை ஆகியவை மத்திய அரசின் ஏஜென்சியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாமகவினர் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள ராணிப்பேட்டை போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, மாவட்ட பாமக செயலாளர் சரவணன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “மாரத்தான் ஓட்டத்துக்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது, மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் போலீஸார் அனுமதி வழங்குவார்களா? போலீஸார் யாருக்காக உள்ளனர்? பொதுமக்களுக்காகவா அல்லது ஆளுங்கட்சியினருக்காகவா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தும்போது மத்திய அரசின் ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறை மட்டும் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது?” என்றார்.

ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி வழங்கிய விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒருவேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால், டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்படும் என்று கூறி, விசாரணையை நவ.17-க்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x