Published : 31 Oct 2023 06:13 AM
Last Updated : 31 Oct 2023 06:13 AM
ஈரோடு: ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், நவ. 6-ம் தேதி சீமான் ஆஜராக வேண்டுமென ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தவிர்க்க முடியாத காரணத்தால் சீமான் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, நவ.6-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்த நீதிபதி, அன்று சீமான் ஆஜராக உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT