Published : 23 Sep 2023 05:07 AM
Last Updated : 23 Sep 2023 05:07 AM

அரசுப் பள்ளியில் துர்நாற்றம் வீசிய தண்ணீர் - ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள பனைகுளம் அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் இருந்த நீரில் வீசிய துர்நாற்றத்துக்கான காரணத்தை அறிவதற்காக, நீர் மாதிரி சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பனைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளியின் பிளாஸ்டிக் தண்ணீர்தொட்டியில் கடந்த 21-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், கல்விமற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையில், தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்திருக்கலாம் என்று பரவிய தகவலால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீரில் ஏற்பட்ட நாற்றத்துக்கான காரணத்தை அறிவதற்காக, தடய அறிவியல் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பின்னர், தண்ணீர் தொட்டியில் இருந்து காவல் துறையினர் நீர் மாதிரி எடுத்து, சென்னையில் உள்ள காவல் துறையின் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆய்வக முடிவுகள் கிடைக்க ஓரிரு நாட்களாகலாம் எனத் தெரிகிறது. இந்த பரிசோதனைமுடிவு வந்த பிறகே, துர்நாற்றத்துக்கான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x