Published : 07 Sep 2023 07:15 AM
Last Updated : 07 Sep 2023 07:15 AM

சனாதனத்தை விமர்சிப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் கருத்து

திருச்சி: சனாதனத்தை விமர்சிப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கூறினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமைச்சர் என்பவர் அரசின் அங்கம். ஓர் அரசு சாதி, மதம் பாகுபாடு பார்க்கக் கூடாது.

எல்லா சாதியும், மதமும் ஒன்று என்று மசூதியில் அல்லது தேவாலயத்தில் அவரால் பேச முடியுமா? சாதி, மதம் பாகுபாடு இல்லை என்று கூறுவோர், தேர்தலில் போட்டியிடும்போது சாதி இல்லாதவர் என்று பிரகடனம் செய்ய வேண்டியதுதானே?

அனைத்து சமூகத்தினரும் கோயில் பிரவேசம், பூஜைகளில் பங்கேற்பு ஆகியவற்றை 1,000 ஆண்டுகளுக்கு முன்பே பகவான் ராமானுஜர் நிகழ்த்திக் காட்டிவிட்டார். ஆனால், இவர்கள் நிகழ்த்தியதுபோல பேசி வருகின்றனர்.

சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்களையும், இந்துக்களுக்கு விரோதமாகப் பேசுபவர்களையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.

சனாதனம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. சனாதனத்தில் சாதி கிடையாது. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து உருவானவையே ஜெயின், புத்தம்,பார்சி மதங்கள். சனாதனம்தான் அந்த மதங்களின் வேர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x