Published : 27 Aug 2023 04:10 AM
Last Updated : 27 Aug 2023 04:10 AM
சென்னை: தமிழகம் முழுவதும் மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள், மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளில் சிறை அதாலத் நடந்தது.
இதில், சிறு வழக்குகளில் சிக்கி, பிணையில் வெளியே வர முடியாமல் சிறையில் இருப்பவர்களுக்கு சிறை அதாலத் மூலம் அவர்களின் வழக்குகள் நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 79 அமர்வுகள் நடத்தப்பட்டு, 618 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 339 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 249 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். புழல் மத்திய சிறையில் நடந்த அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், எஸ்.எம்.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமத், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள்,
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT