Published : 19 Aug 2023 04:08 AM
Last Updated : 19 Aug 2023 04:08 AM
உதகை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக பொன் விழா மாநாடு வெற்றி பெற, உதகை மாரியம்மன் கோயிலில் கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதிமுக பொன் விழா மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மாநாடு குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தும் பணியில், அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் மதுரைக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாநாடு வெற்றி பெற வேண்டி, நீலகிரி மாவட்ட அதிமுகவினர் உதகை மாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். உதகை கேசினோ சந்திப்பிலிருந்து மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில், உதகை மாரியம்மன் கோயிலுக்கு அதிமுகவினர் ஊர்வலமாக வந்தனர்.
அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் பழங்கள் வழங்கினர். கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், முன்னாள் எம்எல்ஏ ராமு, துணைச் செயலாளர் வி.கோபால கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று பல்வேறு வாகனங்களில் அதிமுகவினர் மதுரை மாநாட்டுக்கு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT