Published : 19 Aug 2023 04:37 AM
Last Updated : 19 Aug 2023 04:37 AM

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி - ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் - நடத்துநர் பணிக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர் - நடத்துநர் (டிசிசி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 685 ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகநேற்று பிற்பகல் 1 மணிக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் (server error) முடங்கியது. சுமார்ஒரு மணி நேரத்துக்கு மேலாகஇணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததால் விண்ணப்பதாரர்கள் அவதியடைந்தனர். இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இணையதளம் சீரான முறையில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒரே நேரத்தில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது.

இது சிறிது நேரத்திலேயேசரி செய்யப்பட்டது. எனினும், செப்.18-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

விரிவான வழிகாட்டுதல்கள்: காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும்வகையில் அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.விண்ணப்பிப்பதற்கான முதல் நிலையில் இருந்து தேவையான ஆவணங்கள், தேர்வு நடைமுறைகள், விண்ணப்பிக்கும் நடைமுறைக்கான வீடியோ உள்ளிட்ட அனைத்தும் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் பெறுவதற்கான தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தலுக்கான இறுதி நாள் செப்.18-ம் தேதி ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x