Published : 01 Aug 2023 04:07 AM
Last Updated : 01 Aug 2023 04:07 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு பள்ளி மாணவர் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள், மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வக்கண்ணன். இவர் மகன் திருமுருகன் (16), மல்லல் அரசு பள்ளி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 26-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற திருமுருகனை, தனியார் பள்ளி மாணவர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். போலீஸார் விசாரணையில், வாலிபால் விளையாடிபோது ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிந்த சிவகங்கை தாலுகா போலீஸார், தனியார் பள்ளி மாணவரை கைது செய்தனர். ஆனால், இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யவில்லை எனக் கூறி, சாத்தரசன்கோட்டையில் உயிரிழந்த மாணவரின் உறவினர்கள், மாணவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT