Published : 02 Jan 2023 09:05 AM
Last Updated : 02 Jan 2023 09:05 AM

பாகிஸ்தான் - நியூஸிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடக்கம்: ரசிகர்களுக்கு இலவச அனுமதி

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி

கராச்சி: பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 2) கராச்சியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஜாவித் மியான்தத், ஹனீப் முகமது கேலரிகள் தவிர, மற்ற கேலரிகளில் அமர்வதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. ஜாவித் மியான்தத், ஹனீப் முகமது கேலரிகளில் தினசரி டிக்கெட் விலை ரூ.500 ஆக இருக்கும்.

கிரிக்கெட் போட்டியைக் காண அதிக அளவில் ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைப்பதற்காகவே இந்த இலவச அனுமதித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச அனுமதி வழங்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x