Published : 04 Dec 2022 07:52 AM
Last Updated : 04 Dec 2022 07:52 AM
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று பிரான்ஸ் - போலந்து மோதவுள்ளன. அல்துமாமா மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8 முறை பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 முறை போலந்து வெற்றிபெற்றுள்ளது. 5 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
கடந்து வந்த பாதை..
பிரான்ஸ்
> 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
> 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வென்றது.
> 0-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வி.
> 2006-ம் ஆண்டு பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் நடப்பு சாம்பியன் என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
> போலந்துக்கு எதிராக பிரான்ஸ் கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணி 3 வெற்றிகளையும், 4 டிராக்களையும் பதிவு செய்தது. கடைசியாக பிரான்ஸ் அணி 1982-ம் ஆண்டு நடைபெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தில் போலந்திடம் 0-4 என்ற கணக்கில் வீழ்ந்திருந்தது.
> 1986-ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளது போலந்து அணி.
போலந்து
> மெக்சிகோவுக்கு எதிராக டிரா.
> 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
> 0-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி.
> போலந்து கோல்கீப்பர் வோஜ்சிச் ஸ்கெஸ்னி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இரு பெனால்டியை தடுத்த 3-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியவர். இந்த வகையில் அமெரிக்காவின் பிராட் ஃப்ரைடல் 2002-ம் ஆண்டும், ஜான் டோமாஸ்சுஸ்கி 1974-ம் ஆண்டும் தலா இரு பெனால்டி வாய்ப்புகளை தடுத்திருந்தனர்.
> கத்தார் உலகக் கோப்பையில் லீக் சுற்றில் போலந்து அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. அதுவும் வலுவான அர்ஜென்டினாவுக்கு எதிராக.
> உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணியை ஒரே ஒரு முறை மட்டுமே போலந்து வென்றுள்ளது. 1982-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் போலந்து 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT