Published : 09 Oct 2022 06:32 AM
Last Updated : 09 Oct 2022 06:32 AM

யு-17 கால்பந்தில் மியான்மரை பந்தாடியது இந்தியா

அல் கோபர்: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் சவுதி அரேபியாவில் உள்ள அல் கோபர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று மியான்மரை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய அணி சார்பில் வன்லால்பேகா கைட் 23 மற்றும் 34-வது நிமிடத்திலும், தங்கல்சூன் காங்டே 32 மற்றும் 44-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று சவுதி அரேபியாவுடன் மோதுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x