Published : 18 May 2020 15:40 pm

Updated : 18 May 2020 15:40 pm

 

Published : 18 May 2020 03:40 PM
Last Updated : 18 May 2020 03:40 PM

தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றிக்காக அயராது போராடும் கேப்டன் கோலி, தற்போது சிறந்த பேட்ஸ்மெனும் ஆவார்: தூக்கி நிறுத்திய இயன் சாப்பல் 

kohli-unquestionably-the-best-at-the-moment-ian-chappell

தற்போதைய தலைமுறையில் 3 வடிவங்களிலும் ஆகச்சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலிதான் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் பண்டிதருமான இயன் சாப்பல் தூக்கி நிறுத்தியுள்ளர்.

கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரில் கோலியே கேள்வியின்றி இப்போதைக்கு சிறந்தவர் என்கிறார் இயன் சாப்பல்.

யூடியூபில் ராதாகிருஷ்ணன் ஸ்ரீநிவாசன் என்பவர் நடத்தும் ஆர்கே ஷோவில் இயன் சாப்பல் கூறியதாவது:

அந்தக்குழுவில் 3 வடிவங்களிலும் கோலிதான் சிறந்த வீரர். இதில் கேள்விக்கே இடமில்லை. 3 வடிவங்களிலும் அவரது சாதனை நம்ப முடியாமல் இருக்கிறது.

கோலி பேட்டிங்கைப் பற்றிக் கூறக்கேட்ட போது, அவர் பொருள்பட பேசினார். பேட்டிங்கில் அவரது அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா வந்த போது அவரை நேர்காணல் செய்தோம். அதில் ஏன் டி20 பாணி பேன்சி ஷாட்களை ஆட மாட்டார் என்பதற்கான காரணங்களை அவர் விளக்கினார்.

குறிப்பாக அது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஊடுருவுவதைத் தான் விரும்பவில்லை என்றார். நான் ஆடிய காலத்தில் சிறந்த அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ். அவர் சாதாரண ஷாட்களையே ஆடுவார், ஆனால் அவர் இடைவெளியில் நன்றாக பந்தை செலுத்தி ஆடக்கூடியவர். வேகமாக ரன்களைக் குவிப்பார். கோலியும் அவரைப் போன்றவர்தான். மரபான கிரிக்கெட் ஷாட்களையே ஆடுகிறார், அதை நன்றாக ஆடுகிறார்.

கோலியை தனித்துவமாக்குவது அவரது உடற்தகுதி. அதுதான் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ரன்னுக்காக அவர் ஓடும் வேகம். அவரது சில ஆட்டங்கள் உண்மையில் பிரமாதம்.

கேப்டன்சியைப் பொறுத்தவரையில் கோலியிடம் உள்ள இன்னொரு அம்சம் தோல்வியைக் கண்டு அஞ்சமாட்டார். வெற்றிபெறும் முயற்சியில் தோல்வி வந்தால் கூட அவர் கவலைப்பட மாட்டார். வெற்றியை எந்த தருணத்திலும் முன்னிறுத்துவார், அதுதான் கோலியிடம் எனக்குப் பிடித்தது. எந்த ஒரு கேப்டனும் அந்த வழியை கடைப்பிடிக்க வேண்டும்.

கேப்டன்சியை அவர் எடுத்துக் கொண்ட புதிதில் இவர் உணர்ச்சிவயப்படுபவர் என்று கருதினேன். அது அவர் கேப்டன்சியை பாதித்து விடும் என்றே கருதினேன். ஆனால் அவர் தனது இந்தக் குணத்தையே தன் கேப்டன்சி சிறந்து விளங்க பயன்படுத்திக் கொண்டார். மிகவும் புத்திசாலியான கிரிக்கெட் வீரர் கோலி.

இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Kohli unquestionably the best at the moment: Ian Chappellதோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றிக்காக அயராது போராடும் கேப்டன் கோலிதற்போது சிறந்த பேட்ஸ்மெனும் ஆவார்: தூக்கி நிறுத்திய இயன் சாப்பல்கிரிக்கெட்இந்தியாகோலிவிராட் கோலிஇயன் சாப்பல்கேன் வில்லியம்சன்ஜோ ரூட்ஸ்டீவ் ஸ்மித்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author