Last Updated : 16 Jun, 2017 02:17 PM

 

Published : 16 Jun 2017 02:17 PM
Last Updated : 16 Jun 2017 02:17 PM

கேதர் ஜாதவ்வை பந்து வீச அழைத்ததில் தோனியின் ஆலோசனை முக்கியமானது: கோலி

வங்கதேச அணியுடனான அரையிறுதி போட்டியில் கேதர் ஜாதவ்வை பந்து வீச அழைத்ததில் தோனியின் ஆலோசனை முக்கியமானது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது.

இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

முன்னதாக வங்கதேச அணியுடனான நேற்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி தனது முதல் இரண்டு விக்கெட்களை விரைவாக இழந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் - முஷ்புகிர் ரகீம் அந்த அணிக்கு வலுவான தொடக்கம் அளித்தனர். 121 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த இணை இந்திய சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் சூழலில் விழுந்தது.

முன்னணி பவுலர்கள் பலரது பந்து வீச்சு கைகொடுக்காத நிலையில் கேதர் ஜாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

6 ஓவர்கள் பந்து வீசிய தேதர் ஜாதவ் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வக்கதேச அணி ரன் குவிப்பை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது.

கேதர் ஜாதவ்வை பந்து வீச தேர்வு செய்தலில் தோனியின் பங்கு முக்கியமானது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறும்போது, "ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் கேதர் ஜாதவை பந்து வீச அழைத்த முடிவுக்கான மொத்த பாராட்டையும் நான் மட்டுமே ஏற்க விரும்பவில்லை.

வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், தோனியுடன் ஆலோசித்தே இந்த முடிவை எடுத்தேன். இந்த பாராட்டு தோனிக்கு சேர வேண்டியது. கேதர் ஜாதவ் உண்மையாக சிறப்பாக பந்து வீசினார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். பேட்ஸ்மேன்கள் எங்கு தடுமாறுவார் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது" இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x