Last Updated : 12 Aug, 2016 02:56 PM

 

Published : 12 Aug 2016 02:56 PM
Last Updated : 12 Aug 2016 02:56 PM

நான் கிரிக்கெட் விளையாடுகிறேன், தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்: தோனி திட்டவட்டம்

ஓய்வு பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி, ஆட்டத்தில் மேலும் தீவிரமாக கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

“எம்.எஸ்.தோனி: தி அன் டோல்டு ஸ்டோரி” என்ற அவரது சுயசரிதை அடங்கிய திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தோனி கலந்துரையாடலில் கிரிக்கெட் ஆட்டத்தில் மேலும் கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “இது பதிலளிக்க கடினமான கேள்வியாகும். நான் வளரும் போது வாழ்க்கையில் எனக்கு இரண்டு தெரிவுகளே இருந்தது. ஒன்று கிரிக்கெட் மற்றொன்று படிப்பு. எனக்கு வேலை கிடைத்த போது, கிரிக்கெட் இல்லாவிட்டாலும் மரியாதைக்குரிய ஒரு வேலை ஒன்று கையில் உள்ளது என்ற எண்ணமே இருந்தது.

நான் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பக்கங்களைப் பார்த்து என்னை மக்கள் எந்த ரோலில் இருக்க விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்வேன். நான் நிகழ்காலத்தில் இருக்கவே விரும்புகிறேன், எதிர்காலம் பற்றி இப்போது குழப்பிக் கொள்ள விரும்பவில்லை.

நான் கடந்தகாலத்திலிருந்து சிலவற்றைக் எடுத்துக் கொள்கிறேன், ஒருவருக்கு எதிர்கால இலக்குகளும் தேவை. ஆனால் முக்கியமானது நிகழ்காலமே.

இதுதான் எனது மைல்கல் என்று நினைத்து நான் ஒருநாளும் கிரிக்கெட் ஆடியதில்லை. ஸ்கூலிலோ பார்க்கிலோ ஆடும் போது கூட வெற்றிதான் குறிக்கோள். எப்போதும் மைல்கல்கள் நமது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.

அப்படியென்/றால் மைக்கேல் பெல்ப்ஸ் 5 ஒலிம்பிக் தங்கம் வென்ற பிறகு ஓய்வு பெற்றிருக்கலாமே. ஒருவர் எந்தளவுக்கு தங்கள் பணியை தொடர முடியும் என்பது பற்றியதாகும் இது. எவ்வளவு நன்றாக செயல்படுகிறோம், இதனை எந்த அளவுக்கு மேலும் எடுத்துச் செல்ல முடியும் என்பதைப் பொறுத்ததாகும் ஒருவர் எடுக்கும் முடிவு” என்று விலாவாரியாக விளக்கம் அளித்தார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x