Published : 23 Dec 2023 07:58 AM
Last Updated : 23 Dec 2023 07:58 AM
கிரேட்டர் நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் எஸ்.கலைவாணி தனது முதல் சுற்றில் கேரளாவைச் சேர்ந்த மிலானோவை எதிர்த்து விளையாடினார். இதில் கலைவாணியின் இடைவிடாத தாக்குதலால் நடுவர் மூன்றாவது ரவுண்டில் போட்டியை நிறுத்தி அவரை வெற்றியாளராக அறிவித்தார்.
கலைவாணி தனது அடுத்த சுற்றில் ஹரியாணாவின் கித்திகாவுடன் மோதுகிறார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சோனியா லாதர் 5-0 என்ற கணக்கில் மத்தியபிரதேசத்தின் மஹி லமாவை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT