Published : 04 Sep 2023 08:30 AM
Last Updated : 04 Sep 2023 08:30 AM
லாகூர்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. மெஹதி ஹசன் மிராஸ், ஷன்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர்.
ஆசியக் கோப்பை போட்டி பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று லாகூர் கடாபிமைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. நயீம் 28, தவ்ஹீத் ஹிருதோய் 0, முஷ்பிகுர் ரஹிம் 25, ஷமிம் 11 ரன்கள் எடுத்தனர்.
ஆனால், அதிரடியாக விளையாடிய மெஹதி ஹசன் மிராஸ் 119 பந்துகளில் 112 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஷன்டோ 105 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடத் தொடங்கியது. இருப்பினும் 44.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் இப்ராஹிம் சத்ரான், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT