Published : 05 Aug 2023 08:33 AM
Last Updated : 05 Aug 2023 08:33 AM
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-229 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. முன்னதாக இந்திய அணி கால் இறுதி சுற்றில் 228-226 என்ற கணக்கில் சீன தைபேவையும், அரை இறுதி சுற்றில் 220-216 என்ற கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT