Published : 15 Jul 2023 06:02 AM
Last Updated : 15 Jul 2023 06:02 AM

அமெரிக்க ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து

கவுன்சில் பிளஃப்ஸ்: அமெரிக்காவின் கவுன்சில் பிளஃப்ஸ் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் கொரியாவின் சுங் ஷுயோ யுனை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக் ஷயா சென், செக்குடியரசின் ஜான் லவுடாவை 21-8, 23-21 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தார். கால் இறுதியில் லக் ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த சங்கர் முத்துசாமியுடன் மோதுகிறார். சங்கர் முத்துசாமி 2-வது சுற்றில் 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலியன் மிஷா ஜில்பர்மேனை தோற்கடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x