Published : 14 Mar 2016 10:07 AM
Last Updated : 14 Mar 2016 10:07 AM

வாசிப்பதற்கு இடம்

பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டிடங்கள் அல்லது முன்பு பயன்படுத்தப்பட்டு பிறகு மூடப்பட்ட அரசு கட்டிடங்கள் வீணாக பயனில்லாமல் கிடப்பதைப் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். இந்த நிலைக்கு மாறாக, தேனியிலுள்ள ரயில் நிலைய நடைமேடைகளில் அமர்ந்து படிக்க, அரசுப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இத்தகைய பணிகள் சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.

- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.



தேர்தல் விதிமீறலைக் கட்டுப்படுத்த, தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டலாம். அதிலும், தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணை வெளியிட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. பறக்கும் படை, நிலைப்படை, மற்றும் வீடியோ குழு என, சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளையும் கண்காணிக்க 48 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதால், வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட எண்ணும் கட்சிகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு சவாலாக அமையும் என நம்பலாம். கடந்த தேர்தலில் புகார்கள் கொடுக்கப்பட்டும் சரிவர நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்ற தகவல்கள் வெளியாயின. இந்த முறை அது போன்ற தவறுகளும் நிகழாவண்ணம் முழு கவனத்துடன், விதி மீறல்கள் தொடர்பான புகார்கள் வரும்போது அவற்றின்மீது உடனுக்குடன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x