Published : 30 Dec 2022 08:34 AM
Last Updated : 30 Dec 2022 08:34 AM
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பிராந்திய மொழிகளில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விப் படிப்புகளை அளிப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மத்திய பிரதேசத்தில் இந்திவழி மருத்துவப் பட்டப்படிப்பும் அதைத் தொடர்ந்து மருத்துவப் பாடநூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நிதியமைச்சரின் பேச்சு கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
மகாத்மா காந்தி, சுப்ரமணிய பாரதியார், நெல்சன் மண்டேலா, நோம் சோம்ஸ்கி போன்ற ஆளுமைகளும் சமகால அறிஞர்களும் கல்விச் செயற்பாட்டாளர்களும்கூட தாய்மொழி வழியிலேயே கல்வி புகட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவக் கல்வியைத் தாய்மொழியில் வழங்குவது இந்தியா போன்ற நாட்டில் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் துணிபு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT