Last Updated : 26 Sep, 2018 09:10 AM

 

Published : 26 Sep 2018 09:10 AM
Last Updated : 26 Sep 2018 09:10 AM

2 மினிட்ஸ் ஒன்லி : 11

நானோ, என்னோட நண்பர்களோ, என்கூட வேலை பார்ப்பவர்களோ அல்லது மத்தவங்களோ.. ஏன் நாம் எல்லோருமே, ‘விடுமுறை நாட்கள்ல அதிக நேரத்தை வீட்டுலதான் செலவிடுறோம்’னு சொல்லிக்கிறோம். ‘ஞாயித்துக்கிழமைல அப்படி என்னதான் பண்ணுவீங்க?’ன்னு கேட்டா, ‘குடும்பத்தோட செலவழிப்போம்’னு பதில் சொல்வோம்.

நல்லா யோசித்தால், பெரும்பாலான விடுமுறை நாளை வீட்டுல ஒரே இடத்துல உட்கார்ந்திருப்பதில்தான் செலவழிப்போம். அதுவும் ஹாலில் இருக்கும் ஒரு ஷோபா, இல்லேன்னா சேரில் உட்கார்ந்து கிடப்போம். டி.வி. ஓடிட்டே இருக்கும். செல்போன்ல ஏதாவது செய்துட்டு அப் படியே சாயங்காலம் வந்துடும். அப்புறம் என்ன? குழந்தைக்கு சாப்பாடு ஊட் டிட்டு எப்பவும்போல தூங்கப் போயிடு வோம்.

சமீப காலமா பல வீடுகள்ல குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு, அவங்க கையில ஒரு செல்போனோ, டேப்லெட்டையோ பெற்றோர் கொடுத்துடு றாங்க. அந்தக் குழந்தை அதையே பார்த்துட் டிருக்கும். அப்பா - அம்மா வேற வேலை பார்ப்பாங்க. திரும்பவும் திங்கள்கிழமை ஆபீஸ் வர்றவங்கிட்ட, ‘நேத்து பொழுது எப்படிப் போச்சு?’ன்னு கேட்டா, ‘நாள் முழுக்க வீட்டுலதான் போச்சு’னு சொல் வாங்க. அவங்களுக்கு எங்கே, எப்படி நேரத்தை செலவிடுறதுன்னு தெரியல. அதுதான் உண்மை.

ஒருநாள் என் நண்பர் ஒருவர் உணர்வு பொங்க, ‘என் குழந்தைக்கு 4 வயசு. ‘உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா’ன்னு கேட்டா, ‘அம்மா... அம்மா’ன்னு சொல்லுது. எனக்கு நேரம் கிடைக்கிறப்பல்லாம் என் குழந் தைக் கூடவே இருப்பேன். 4 வயசு குழந் தைக்கு என்ன தேவையோ அதெல்லாம் கேட்காமலேயே வாங்கிட்டு போய் சர்ப்ரைஸ் பண்ணுவேன். இது மட்டுமில்ல அது கேட்பதையும் வாங்கித் தருவேன். ஆனா அம்மாதான் பிடிக்கும்னு சொல்லுது’ என்று புலம்பினார். இதைப் போல பல பேரு புலம்பலாம். அந்த நண்பர் அப்படிச் சொன்னது எனக்கு இன்னொரு மனிதரை நினைவூட்டியது.

காலேஜ் முடிச்சுட்டு நான் வேலைக்கு போன நேரம். 2007. கோயம்புத்தூரில் ஏகப்பட்ட கடைகள், கம்பெனிகள் இருக்கும் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் அது. அங்கே என் ஆபீஸும் ஸ்டுடியோவும் இருந்தது. பக்கத்து கடையில் திருப்பூர்காரர் ஒருவர் வேலை செய்தார். அவருக்கு சம்பளம் கம்மி. அதனால வாரத்தில் ஒருநாள் மட்டும் திருப்பூர் போவார். சனிக்கிழமை ராத்திரி போய், ஞாயிற்றுக்கிழமை முழுசா ஊரில் மனைவி, குழந்தைங்களோட இருந்துட்டு திங்கள்கிழமை காலையில் திரும்பிடுவார். எங்களைவிட 15 வயதுதான் அவருக்குக் கூட இருக்கும். ‘பெருசு’ன்னுதான் நாங்க கூப்பிடுவோம்.

அப்பப்போ பார்த்துப்போம். பேசிப்போம். ஒண்ணா டீ குடிப்போம். சில சமயம் படம் பார்க்க அவரையும் கூப்பிட்டுக்குவோம். கல கல டைப். நல்லாப் பேசுவார். அவரோடு சேர்ந்தா நேரம் ஜாலியா போகும். அவரை உற்று கவனிச்சதில் சில விஷயம் தெரிஞ்சுது.

பார்க்குறப்ப ஒரு மரத்தில் வித்தியாசமா ஒரு இலை தெரிஞ்சா, உடனே அதில் நாலு இலைகளைப் பறிச்சு வெச்சிப்பார். ஒரு பெட்டிக் கடைக்கு போனா.. அங்கே வித்தி யாசமா ஒரு பாட்டிலை பார்த்தா, ‘இதை நான் எடுத்துக்கிட்டுமா?’ன்னு கடைக்காரர்கிட்ட கேட்டு எடுத்துப்பார். வேற எங்கேயாவது போறப்ப, பார்க்க விநோதமா, கடைக்கார ருக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருளை பார்த்தா, அதையும் கேட்டு எடுத்துப்பார்.

‘‘என்னடா இவர் இப்படில்லாம் பண் றார்?’’னு என் நண்பர்கள் என்னிடம் கேட் பாங்க. நானும் அவரோட அந்த பழக்கவழக் கத்தைத் தொடர்ந்து கவனிச்சுட்டுத்தான் வந்தேன். நானும் அவரிடம் அதைப் பத்தி எதுவும் கேட்டதில்லை.

ஆனா சுவாரஸ்யம் சும்மா விடாதில்ல. அப்படி தோணின ஒரு நாள், ‘‘எதுக்கு சார் இந்த மாதிரி பொருளைத் தேடித் தேடி எடுக்குறீங்க?’’னு கேட்டேன்.

‘‘என் குழந்தைக்கு இப்போ 4 வயசா குது. வாரத்தில் ஒரு நாள்தான் நான் வீட்டுக் குப் போறேன். வீட்டுக்கு நான் போறப்பல் லாம் ஏதாச்சும் ஒண்ணு வாங்கிட்டு வரு வேன்னு எதிர்பார்க்கும். நான் எடுத்துட்டுப் போன வித்தியாசமான இலையை வெச்சி நானும் குழந்தையும் நாலு மணிநேரம் விளையாடுவோம். விளையாண்டுக்கிட்டே நான் ஏதாச்சும் பேசுவேன்... அது விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தை ஏதாச்சும் பேசும்... நான் சிரிப்பேன். நான் எடுத்துட்டுப் போற பாட்டில்ல பெயிண்ட்டிங்லாம் செஞ்சு விதவிதமாக ரெண்டுபேரும் விளையாடு வோம். அது என்ன பொருள் என்பதை விட அந்தப் பொருளை வெச்சி நாம குழந்தை யோட எவ்வளவு நேரம் விளையாடுறோம் கிறதுதான் முக்கியம்!’’ என்றார்.

இதை கேட்டபோது எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஒரு குழந்தை சந்தோஷமா இருக்கணும்னா அதுக்கு நாம சர்ப்பரைஸ் கிஃப்ட் கொடுக்கணும், ஐபேடு வாங்கிக் கொடுக்கணும், டேப்லெட், செல்போன் வாங்கிக் கொடுக்கணும், பார்பி பொம்மை வாங்கிக் கொடுக்கணும் என்பது இல்ல.

ஒரு இலையை வைத்துக்கூட தனது குழந் தையோடு 4 மணி நேரத்தை இனிப்பா செலவிட முடியும்னு ஒரு தந்தை நிரூபிச் சிருக்கார். ஒரு பாட்டிலை வைத்து நாள் முழுக்க குழந்தையொடு விளையாடவும் முடியும்னு காட்டி யிருக்கார். இதில் எனக்குள் ஆழமா பதிந்த ஒரு விஷயம்... ஒரு குழந்தையின் கையில் கொடுக்குற பொருள் முக்கியமில்ல. அந்தக் குழந்தையோடு செலவழிக்கிற நேரம்தான் பெரிது.

உணர்வு மிகுந்த இந்த விஷயத்தை என் சின்ன வயதிலேயே, அதுவும் எனக்கு குழந்தையெல்லாம் பிறக்கறதுக்கு முன்னா டியே உணர்த்தியவர் அந்தப் பெருசுதான். உண்மையிலேயே அவர் ‘பெருசு’தான்!

‘பையனை நல்ல ஸ்கூல்ல சேர்த்தாச்சு. அழகழகா டிரெஸ் வாங்கியாச்சு. 6-வதுதான் படிக்கிறான். இப்பவே ஸ்மார்ட் போன் யூஸ் பண்றான்’ என்று மற்றவர்களிடம் சொல்லிச் சிரிக்கிற அப்பாக்களை நாம் பார்க்கலாம்.

அதே மாதிரி, ‘அவனுக்குன்னு தனி ரூம். லேப்டாப் வாங்கிக் கொடுத்தாச்சு. அடுத்து பைக் வேணுமாம். அதுமட்டும் இப்போ முடியாதுன்னு சொல்லிட்டேன்’ என்று 8-வது படிக்கும் தன் மகனைப் பற்றி பெருமையா சொல்லிக்கிற அம்மாக்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு இவை எல்லாத்துக்கும் மேல, நாம் கொடுக்க வேண்டியது நேரம்.. நேரம்... நேரம்தான்!

இப்படி நமது நேரத்தை அவங்களுக்கு கொடுக்கலேன்னா, ‘ச்சே… கடந்த காலங் கள்ல நம் குழந்தைகளோடு இன்னும் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கலாமே?’ என்ற ஏக்கம் எதிர்காலத்தில் ஏற்படலாம். அந்த ஏக்கம் வராமல் இருக்கணும்னா... இதோ இந்த நாளில் இருந்தே, நாம் நம் குழந்தைகளுடன் நிறைய நேரத்தைச் செலவிட ஆரம்பிப்போம். அப்படி செய் தால் குழந்தைகள் குழந்தைகளாக இருக் கும்போதே நாம் அவர்களின் அந்தப் பருவத்தை மிஸ் பண்ண மாட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x