Published : 30 Jun 2014 06:30 PM
Last Updated : 30 Jun 2014 06:30 PM

உ.பி. சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாஜக இளைஞர் அணியினர் மீது தடியடி: சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்ட சபை முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினர் மீது போலீ ஸார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் பலர் காயமடைந் தனர்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா கூறுகையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரச்சினை, மோசமான சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவற்றைக் கண்டித்து மாநில அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியதில் 50 பேர் காயமடைந்தனர்" என்றார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

திங்கள்கிழமை சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பாஜக இளைஞர் அணியினர் சட்டசபையை நோக்கி வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி நுழைய முயன்றனர்.

இதைத் தடுக்க முயன்ற போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர் கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில், போலீஸார் உட்பட சிலர் காயமடைந்தனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாஜகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் விஜய் பஹதூர் பதக் கூறுகையில், "மக்கள் பிரச்சினையில் மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதே வழியில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணி யினர் மீது போலீஸார் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். மக்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x