Published : 30 Dec 2022 03:22 PM
Last Updated : 30 Dec 2022 03:22 PM

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் பிரதமர் பூஷ்ப கமல் தஹல் ப்ரசாந்தாவும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹீராபென் அவர்களின் மறைவு குறித்த செய்தியறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாயாரின் ஆன்மா சந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ள இரங்கலில், "திருமதி ஹீராபென் மோடியின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். தனது அன்பிற்கினிய தாயாரை இழந்து வாடும் இந்திய பிரதமர் மோடிக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்துடனும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தனது இரங்கல் செய்தியில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபெனின் மறைவுக்கு மோடிஜி, அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாது ஆன்மா மோட்சம் அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டென்னில் அலிபோவ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரிய இழப்பிற்காக அவருக்கு நான் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது துயரத்தில் நான் பங்கெடுக்கிறேன் ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர், குடும்பத்தினரின் பெரும் துயரத்தில் நாங்கள் பங்கெடுத்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x