Published : 27 Jan 2022 07:25 AM
Last Updated : 27 Jan 2022 07:25 AM
புதுடெல்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்கும்போது மிக அழகிய தலைப்பாகையை பிரதமர் மோடி அணிந்து வருவது வழக்கம். இம்முறை அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்து வந்தார்.
குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அதில்,அந்த மாநிலத்தின் மாநில மலரானபிரம்ம கமலம் பொறிக்கப்பட் டிருந்தது.
அதோடு, மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் பிரதமர் மோடி அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இன்னும் ஒரு சில வாரங்களில் உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இவை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT