Published : 27 Aug 2015 10:28 AM
Last Updated : 27 Aug 2015 10:28 AM

22 வயதில் தலைவனான ஹர்திக் படேல்..

ஹர்திக் படேல்.. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இவர் யார் என்பதே தெரியாது. இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட 22 வயது இளைஞராக இருக்கிறார். குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்து மக்களை ஒரே நாளில் திரட்டி அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

‘‘எங்கள் சமூகத்த வரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காவிட்டால், அடுத்த சட்டசபை தேர்தலில் தாமரை (பாஜக) மலராது’’ என்று பகிரங்கமாக சவால் விடுத்துள் ளார். அந்தளவுக்கு அவருடைய பேச்சை கேட்டு மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர்.

இவருடைய தந்தை விவசாயி. சப்மெர்ஸிபிள் பம்ப் விற்பனையும் செய்து வருகிறார். அவருடைய வியாபாரத்துக்கு துணையாக இருக்கிறார் ஹர்திக். பி.காம் பட்டதாரி ஹர்திக். அகமதா பாத் அருகில் உள்ள விராம்கம் பகுதியில் வசிக்கிறார். சமூக பொரு ளாதார மேம்பாட்டுக்காக ‘படிடார் அனமத் அந்தோலன் சமிதி’ (பிஏஏஎஸ்) என்ற அமைப்பை தொடங்கி அதன் ஒருங்கிணைப் பாளராக இருக்கிறார்.

சர்தார் படேல் குரூப் (இளைஞர் பிரிவு) உறுப்பினராகவும், விராம்கம் பகுதி தலைவராகவும் இருந்தார். அங்கு ஏற்பட்ட பிரச் சினையால் தனியாக பிஏஏஎஸ் அமைப்பை தொடங்கினார். தனது அமைப்பு சார்பில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை மாபெரும் கூட்டத்தை கூட்டினார்.

‘‘படிடார் (அல்லது படேல்) இனத்தை சேர்ந்த மாணவன் 90 சதவீத மதிப்பெண் பெற்றால் கூட அவனுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைப் பதில்லை. ஆனால், எஸ்சி/எஸ்டி, ஓபிசி மாணவர்கள் 45 சதவீத மதிப் பெண் எடுத்தாலும் அவர்களுக்கு கிடைக்கிறது. மற்ற பிரிவினருக்கு நான் எதிரியல்ல. அவர்களுக்கு கிடைப்பது கிடைக்கட்டும். எங்க ளுக்கும் ஓபிசி பிரிவில் இடஒதுக் கீடு அளிக்கட்டும்’’ என்கிறார் ஹர்திக்.

ெபரும் அதிர்வலையை ஏற் படுத்திய ஹர்திக் மீதும் குற்றச் சாட்டுகள் உள்ளன. சர்தார் படேல் குரூப்பில் இருந்த போது ரூ.2 லட்சத்தை கையாடல் செய்து விட்டார் என்கின்றனர். மேலும், இவர் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற படம் இணையதளங் களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x