ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்

ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்

உறுதி செய்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
Published on

புது டெல்லி: ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும், 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தின்போது பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசிம் மகாஜன், “ஓமனில் நடந்த தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தர். அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த 10 இந்தியர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை.

எங்கள் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

அதேபோல, இராக்கில் பாஸ்ரா அருகே மார்ச் 9-ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான சஃபேசியா விஷ்ணு கப்பலில் இருந்த 15 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்போது பாஸ்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலில் இறந்த இந்தியரின் உடலை கொண்டு வருவதற்கும், மீட்கப்பட்ட 15 மாலுமிகளை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எங்கள் குழு பாஸ்ராவில் உள்ளது மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று அவர் கூறினார்.

ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையேயான போர் 14 நாட்களை எட்டியுள்ளது. மோதல் நீடித்து வரும் நிலையில், இந்தப் போர் அதன் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது சர்வதேச நாடுகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஓமனின் சோஹர் மாகாணத்தில் உள்ள அல்-அவாஹி தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதில் அங்கு பணியில் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாக ஓமன் அரசுச் செய்தி நிறுவனம் முதலில் தெரிவித்தது. பின்னர், உயிரிழந்த இருவரும் இந்தியர்கள் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் இப்போது உறுதி செய்துள்ளது.

ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்
காளியம்மாள் ‘சாய்ஸ்’ அதிமுக ஏன்? - ஒரு விரைவுப் பார்வை
ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்
திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?
ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08
ஓமனில் ட்ரோன் தாக்குதல் - 2 இந்தியர்கள் உயிரிழப்பு; 10 பேர் காயம்
கமல்ஹாசனின் ‘மகாநதி’ - சில புதிய திறப்புகள் | சிறப்பு திரைப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in