திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?

மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைக் குறைக்க திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசும் அறிவாலய வட்டாரங்கள், “ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருப்பினும், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக உடனான பேச்சுவார்த்தையில் இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு இல்லை. மார்க்சிஸ்ட், விசிகவுடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்தும் முன்னேற்றம் இல்லை.

கடந்த தேர்தலின்போது மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, புதிய கட்சிகளின் வருகையைக் காரணம் காட்டி திமுக தொகுதிகளைக் குறைத்து வருகிறது. ‘புதிதாகக் கூட்டணிக்குக் கட்சிகள் வந்துள்ளதால், பழைய கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன. உங்களுக்கும் அதே 4 இடங்கள்தான் தர முடியும்’ என திமுக கறாராகத் தெரிவித்துள்ளது.

திமுகவின் இந்த முடிவுக்கு கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த எங்களுக்குக் குறைவான இடங்களைக் கொடுத்துவிட்டு, தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை சீட் வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை திமுக தரப்பில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, “தொடக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழல் இருந்ததால் உங்களுக்கு 10 இடங்கள் தருவதாகக் கூறினோம். ஆனால், இப்போது காங்கிரஸ் நீடிப்பதோடு கூடுதல் இடங்களும் கேட்கிறார்கள்.

ஏற்கெனவே உங்களுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைச் சற்று குறைத்துக் கொள்ளுங்கள்” என திமுக கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பிரேமலதா தரப்பு ‘ஆலோசித்துச் சொல்வதாக’ இழுபறி நிலையில் பதிலளித்துள்ளது. தேமுதிகவின் தொகுதிகள் குறைந்தால், அது தங்களுக்குச் சாதகமாகும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்புகின்றன. இதற்கிடையே, 10 இடங்களை எதிர்பார்த்த விசிக, சமரசமாக 8 இடங்களுக்கு இறங்கி வந்தது. ஆனால் திமுக 5 இடங்கள்தான் என கையை விரித்திருப்பது திருமாவளவன் தரப்பை ஏக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது” என்கிறது அறிவாலய வட்டாரம்.

திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?
தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?
கமல்ஹாசனின் ‘மகாநதி’ - சில புதிய திறப்புகள் | சிறப்பு திரைப் பார்வை
திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?
“கே-பாப், கே-டிராமாவை விட ஆழமானது கொரிய இலக்கியம்!” - நாவலாசிரியர் பியூன் ஹியே-யங் நேர்காணல்
திமுக கூட்டணி சலசலப்பு... தேமுதிக ‘சீட்’ குறையுமா?
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in