Published : 07 Jun 2018 08:52 AM
Last Updated : 07 Jun 2018 08:52 AM

‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நினைவு தினம்: பொற்கோயில் வளாகத்துக்குள் இரு பிரிவினர் கடும் மோதல்

கடந்த 1984-ம் ஆண்டு தீவிரவாதிகளும், சீக்கிய பழமைவாதிகளும் பொற்கோயிலுக்குள் புகுந்து பிரிவினையைத் தூண்டினர். அப்போது, ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ என்ற பெயரில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. பொற்கோயிலுக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை ஒடுக்கியது. இந்தச் சம்பவத்தின் 34-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு பொற்கோயில் வளாகத்துக்குள் நேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பழமைவாத சீக்கியர்கள் சிலர் காலிஸ்தான் தனிநாடு கேட்டும், இந்தியாவுக்கு எதிராகவும் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பியபடி பொற்கோயில் வளாகத்துக்குள் நுழைந்தனர். அப்போது அவர்களுக்கும் ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. வாள்கள், கம்புகள் மூலம் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்தச் சண்டையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பொற்கோயில் கருவறையில் இருந்து 100 அடி தூரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அதற்குள் ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியைச் சேர்ந்த அதிரடிப் படையினர் விரைந்து வந்து கும்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x