Published : 07 Mar 2024 05:20 AM
Last Updated : 07 Mar 2024 05:20 AM
பெங்களூரு/ புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல ஓட்டலுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் கருப்பு பேன்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக் கவசம் அணிந்துள்ளார். ஆனால், குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.
இந்த வழக்கு நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் முக்கிய இடங்களிலும், வலைதளங்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT