Published : 23 Feb 2024 06:35 AM
Last Updated : 23 Feb 2024 06:35 AM

ஹரியாணா வன்முறை: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

நூ (ஹரியாணா): ரியாணாவின் நூ நகரில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலத்தில் ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், “காங்கிரஸ் எம்எல்ஏமம்மன் கான் மீது போடப்பட்டஎஃப்ஐஆரில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான யுஏபிஏ-வின்கீழ் போலீஸார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர். கான் வன்முறையை தூண்டியதாகவும், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் இடுகைகளை பகிர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதை தவிர வேறு சில குற்றச்சாட்டுகளையும் போலீஸார் புதிதாக சேர்த்துள்ளனர்” என்றார். வன்முறை தொடர்பாக கான்கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x