Published : 08 Feb 2024 07:12 AM
Last Updated : 08 Feb 2024 07:12 AM
புதுடெல்லி: அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள முன்மதிப்பீட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கரோனா காலகட்டமான 2019-க்கு முன்பு இருந்ததை விட 2027-ல் உச்சபட்ச அளவை எட்டும். அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024-ல் 7.7 கோடியாக இருக்கும்.
இது, 2023 உடன் ஒப்பிடுகையில் 15.4% அதிகம். இது, 2025-ல் 8.5 கோடியாக அதிகரிக்கும். 2019-க்குமுன்பு சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.9 கோடியாக இருந்த நிலையில் இது அதை விட அதிகம். 2027-ல்அமெரிக்காவுக்கு வருகை தரும் முதல் 20 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா 126%வளர்ச்சியுடன் முதலிடம் வகிக்கும். கடந்த 2019-ல் அமெரிக்காவுக்கு வந்த இந்திய பயணிகளின் எண்ணிக்கை 14.7 லட்சமாக இருந்தது. இது 2023 (14.2 லட்சம்), 2024 (15.6 லட்சம்), 2025 (16.3 லட்சம்), 2026 (17.3லட்சம்), 2027 (18.6 லட்சம்)-ல் தொடர்ச்சியாக கணிசமான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வர்த் தகத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT