Published : 16 Dec 2022 05:56 AM
Last Updated : 16 Dec 2022 05:56 AM

அமேசான் நிறுவனத்தின் பிளாஸ்டிக் கழிவு கடந்த ஆண்டில் 18 சதவீதம் அதிகரிப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு குற்றச்சாட்டு

நியூயார்க்: அமேசான் நிறுவனம் உறுதியளித்தபடி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவில்லை என ஓசியானா சுற்றுச்சூழல் குழுவின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது: அமேசான் நிறுவனத்தின் பேக்கேஜிங் பிரிவிலிருந்து வெளியாகும் பிளாஸ்டிக் கழிவுகள் 18 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது, ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை வெகுவாக குறைப்போம்என்ற அந்த நிறுவனத்தின் உறுதிமொழியை கேள்விக்குறியாக்கிஉள்ளது.

சுற்றுச்சூழல் குழுவின் மதிப்பீடுகளின்படி அமேசானின் பிளாஸ்டிக் கழிவுகள் 2020-ல் 599 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 709மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

பலன் இல்லை: பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்கும் யோசனை அமேசான் வருடாந்திர கூட்டத்தில் வைக்கப்பட்டு அதற்கு 48 சதவீத பங்குதாரர்களின் ஆதவு கிடைத்தது. ஆனால் அதற்கான உரிய பலன் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு 97,722 டன் (214 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல்) பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக அமேசான் வலை தளத்தில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்களைஏற்றுமதி செய்வதற்கான பயன்பாட்டில் பிளாஸ்டிக்கின் எடையைசராசரியாக 7 சதவீதம் குறைத்துள்ளதாக அமேசான் தெரிவித்தது.

எனினும், 2020 மற்றும்2021-க்கு இடையில் மொத்தம் எவ்வளவு பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட்டது என்ற புள்ளி விவரத்தை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

எனவே, அமேசான் நிறுவனம் உறுதியெடுத்தபடி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x