Last Updated : 24 Mar, 2019 06:51 PM

 

Published : 24 Mar 2019 06:51 PM
Last Updated : 24 Mar 2019 06:51 PM

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மூலம் பெட்ரோல் டோக்கன் விநியோகம்: கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல்

பிரச்சாரத்தின்போது உதயநிதியை பைக்கில் பின்தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கானோருக்கு அவரது நற்பணி மன்றம் மூலம் பெட்ரோல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை ஆதரித்து இன்று பண்ருட்டி சட்டப்பேரவைக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

அப்போது உதயநிதியின் பிரச்சார வாகனத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்த நிலையில், அவர்களில் சிலர் பண்ருட்டியை அடுத்த அங்குச்செட்டிப்பாளையத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், தங்களது பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றனர். அவ்வாறு பெட்ரோல் நிரப்பியபோது, பணத்திற்குப் பதிலாக மஞ்சள் நிற டோக்கனைக் கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த தமிழ்ச்செல்வி தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், டோக்கனைப் பறித்து, அது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சரியான பதிலேதும் கூறாத நிலையில்  பெட்ரோல் போட வந்தவர்களிடமிருந்து 127 டோக்கன்களைப் பறிமுதல் செய்து, பண்ருட்டி வட்டாட்சியர் கீதாவிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், தனியார் பெட்ரோல் விநியோக நிலைய மேலாளர் செல்வம் என்பவர் மீது புதுப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x