Published : 08 Apr 2019 08:18 PM
Last Updated : 08 Apr 2019 08:18 PM

கள நிலவரம்: தென்சென்னை தொகுதி யாருக்கு?

தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தனுக்கும். திமுக சார்பில் போட்டியிடும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில், கள நிலவரத்தைப் பொறுத்து, இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, தென்சென்னையில் மட்டும் அதிமுக அக்கட்சியின் வேட்பாளரையே நிறுத்தியுள்ளது, அதிமுகவுக்கு அத்தொகுதியில் எத்தகைய பலம் உள்ளது என்பதை அறியலாம். அதுவும், ஏற்கெனவே எம்.பியாக இருந்தவர்களுக்கு இம்முறை அதிமுக வாய்ப்பளிக்காத நிலையில், இத்தொகுதியில் மட்டும் ஜெயவர்தனையே மீண்டும் களமிறக்கியுள்ளது, அவருடைய பலத்தைக் காட்டுகிறது.

மீனவர்கள் அதிகம் நிறைந்த தொகுதியில், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், இளம் வயது வேட்பாளர் என்பதும் ஜெயவர்தனுக்கு ப்ளஸ். நாடாளுமன்றத்தில் 735 கேள்விகள், 85% வருகைப்பதிவு என நாடாளுமன்ற செயல்பாடுகளிலும் ஓரளவு திருப்தியாக செயல்பட்டுள்ளார் என்பதும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகனை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்றாலும், ஜெயவர்தனுக்காக கூட்டணிக் கட்சியினரும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இது அவருக்குக் கைகொடுக்கலாம்.

எதிர் அணியில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், தேர்தல் அரசியலுக்குப் புதியவர். பிரபலமானவர் என்றாலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு இவர் மீது கொஞ்சம் அதிகமாகவே படிந்தது. பெண்களிடம் தமிழச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழச்சிக்காக மேற்கொண்ட பிரச்சாரம் என புதுவிதங்களில் பிரச்சாரம் இவர் சார்பாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எனவே, தென்சென்னையைப் பொறுத்தவரையில், ஜெயவர்தன் - தமிழச்சி தங்கபாண்டியனுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  அமமுகவைப் பொறுத்தவரையில் இசக்கி சுப்பையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனினும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் இல்லை. வீதி பிரச்சாரங்களிலும் கூட்டம் இல்லை என்பதால், அமமுக உட்பட மற்ற கட்சிகள் தென் சென்னையில் தாக்கம் செலுத்தாது என்றே, கள நிலவரம் உள்ளது.

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இரண்டாவது முறையாகக் களம் இறங்கியுள்ளார். அவருக்கும் திமுக வேட்பாளர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இணையதள கருத்துக் கணிப்பில் அதிமுகவைவிட திமுக முந்தியுள்ளது. முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியனும் இரண்டாம் இடத்தில் ஜெயவர்தனும் உள்ளனர்.  3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஷெரின் உள்ளார். அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் ரங்கராஜனும் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamaden

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x